அலர் வெளியீடு பற்றி
உலக உயிர்கள் ஏனையத்தினின்றும் மனித இனம் எவ்விதத்திலும் உயர்ந்ததில்லை என்பது உண்மையிலும் உண்மை. எனினும் இந்த வாழ்வை ஆழ்மனதைக் கொண்டு ரசித்து ஆறறிவால் ஆராய்ந்து நல்லது கெட்டதை பகுத்தறியும் பண்பு மனிதர்களை தனித்துவமான ஓர் இனமாய் மாற்றிவிடுகிறது. அத்தகைய மனித இனம் மாண்புற வாழ வாசிப்பு மிக முக்கியம் என்பதை உணர்ந்து உருவாக்கப்பட்ட பதிப்பகம் தான், அலர் வெளியீடு.
எங்களது நோக்கம், வாசிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு செறிவான நூல்களை பெரும்பான்மை மக்களின் பயன்பாட்டுக்காய் குறைந்த விலையில் பதிப்பித்து கொடுப்பதே. இதை வியாபார நோக்கத்தை மட்டும் மையமாக கொண்டு செய்யாமல், தனது பொறுப்பாக உணர்ந்து செயல்படுவது தான் அலர் வெளியீட்டின் சிறப்பு என்று தெரியப்படுத்துவதில் பெருமகிழ்வு கொள்கிறது, அலர்.





