முகப்பு /புத்தகங்கள் /ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்
ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம் cover

புத்தகம் விவரங்களைக் காண்க

  • புத்தகத் தலைப்பு : ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்
  • தொகுப்பாசிரியர் : எஸ். அற்புதராஜ்
  • பதிப்பு : ஏப்ரல் 2025 (அலர் வெளியீடு)
  • மொழி : தமிழ்
  • வகை : கட்டுரைத் தொகுப்பு
  • ISBN : 9788198726735
  • பக்கங்கள் : 400
  • கட்டு : பேப்பர்பேக் (Paperback)
  • தாள் : 18.6 kg Maplitho
  • குறியீட்டு எண் : 001

ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்

தொகுப்பாசிரியர்: எஸ். அற்புதராஜ்

Cover Designer: Rohini Mani

★★★★★
(5.0 / 5)399

“Man with a capital M” என்று மாக்ஸிம் கார்க்கி சிலரைப் புகழ்வார். அத்தகைய மனிதர்களிலொருவர் ஆல்பர்ட்.
- எஸ்.வி. ராஜதுரை, பெரியாரிய-மார்க்ஸிய அறிஞர்

“எந்த ஒரு படைப்பையும் நிதானமாக அணுக வேண்டும். ஒரு படைப்புப் புரியவில்லை என்றால் அதைப் பற்றி அவசர முடிவு எதுவும் கொள்ளக்கூடாது; அதைச் சில காலம் கழித்து மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.” இவ்வாறு ஆல்பர்ட் கூறியவை, படைப்புகளை எளிதில் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் நம்மைப் போன்றோருக்குப் பெரிதும் உதவியதாக இருந்தது.
- அம்ஷன் குமார், ஆவணப்பட இயக்குநர்

ஆல்பர்ட் கொடுத்த கண்களின் வழியாகத்தான் நான் இன்று இந்த உலகைப் பார்க்கிறேன். அவரது பார்வை என்னை முழுமையாக மாற்றிவிட்டது. நான் எழுதிய ஒவ்வொரு கதைக்கும் பின்னால் ஆல்பர்ட் இருக்கிறார் என்பதே உண்மை.
- இமையம், எழுத்தாளர்