
பழம்படு பனை (பனை கதைகள் 120)
ஒரு மரம்
100 எழுத்தாளர்கள் · 120 சிறுகதைகள்
தொகுப்பாசிரியர்கள் · ம. கேசவன் - அதங்கோடு அனிஷ்குமார்
பனை மரம் தொடர்பான 120 கதைகளின் பெருந்தொகுப்பு. தொகுதி 1 மற்றும் தொகுதி 2 ஆகிய இரண்டும் சேர்த்து ஒரே முழுத் தொகுப்பாக அலர் வெளியீட்டின் வாயிலாக வெளிவருகிறது. சிறுகதை, பண்பாடு, சூழலியல், இயற்கை மற்றும் நாட்டுப்புற மரபுகளை ஒருங்கே தாங்கி நிற்கும் அரிய ஆவணம்.
இத்திட்டம் செப்டம்பர் 01 முதல் அக்டோபர் 15 வரை மட்டுமே...
நூல் அக்டோபர் 20க்குப் பிறகு அனுப்பிவைக்கப்படும்.
அணிந்துரை நல்கிய மூத்த அறிஞர்கள்
— ஆகியோரின் விரிவான ஆய்வு அணிந்துரையுடன் வெளிவருகிறது.
இரு தொகுதிகள்
ஒரு கதைக்காலம், இரு பெரும் தொகுதிகள்
பனை சார்ந்த நூறாண்டு கதைகளின் இருவேறு காலகட்டங்களை இரு பாகங்கள் வழியாக இந்த ஆவணம் பேசுகிறது.

மரபும் வாழ்வியலும் — தொடக்க கால கதைகள்
தமிழர் தொல் பண்பாடு, பனை சார்ந்த நம்பிக்கைகள், கிராமிய வாழ்வியல் மற்றும் தொடக்க கால இலக்கிய ஆளுமைகளின் அரிய கதைகளின் தொகுப்பு.

உழைப்பும் அரசியலும் — சமகால எழுத்துகள்
பனைத்தொழிலாளர்களின் உழைப்பு, சந்தைக் கலாச்சாரம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமகால அரசியல் சூழலின் கதைகள் அடங்கிய தொகுதி.
நூலில் பதிவாகியுள்ள 4 முதன்மை வாழ்வியல் தளங்கள்
பண்பாட்டு மரபு : பனை தமிழரின் தொல் அடையாளமாகவும், உணவாகவும், வழிபாட்டு மரபாகவும் விளங்கும் விதம்.
வட்டார மணங்கள் : கொங்கு, கரிசல், நாஞ்சில், டெல்டா உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டார பேச்சு வழக்குகளும் நிலப்பரப்பும்.
உழைப்பும் தொழிலும் : பனை ஏறி வாழ்வோரின் அன்றாட உழைப்பு, உடல் வலி, வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அவர்களின் ஆளுமை.
சூழலியல் அரசியல் : பனை மர அழிவு, கள் தடை விவாதங்கள், சந்தைக் கலாச்சாரம் மற்றும் எதிர்கால சூழலியல் பாதுகாப்பு.
“பனை என்பது மரமல்ல; அது தமிழரின் தொல் பண்பாட்டின், உழைப்பின், வாழ்வின் அடையாளம்.”
நூல் பற்றி
நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் பனை
தமிழர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கும் தொல்மரபிற்கும் அடையாளமாக இருக்கும் பனையின் இருப்பு, நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் எவ்வாறு உணரப்பட்டிருக்கிறது என்பதை ‘பனைக் கதைகள் 120’ என்னும் இப்பெருந்தொகுப்பு ஆவணப்படுத்துகிறது.
பனைசார் மக்களின் வாழ்வும் வலியும் வெளிப்படும் இக்கதைகளில், சந்தைக் கலாச்சாரத்தின் விளைவாகப் பனைசார் புழங்குபொருட்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சவால்களும் பதிவாகியிருக்கின்றன.
பனை தரும் அமிர்தமான ‘கள்’ளை ஓர் உணவாக ஏற்பதையும் மறுப்பதையும் ஆவணப்படுத்தும் கதைகள், சமகால அரசியல் சூழலில் வேறுபட்ட விவாதப் புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன.
பல்வேறு வாழ்வியல் விழுமியங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் நிலப்பரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தொகுப்பிலுள்ள கதைகள், அந்தந்த வட்டார வாழ்வியலை மண்ணின் மணத்தோடு முன்னிறுத்துகின்றன. தமிழ்நாட்டின் வேறு வேறு நிலப்பரப்புகளை இணைக்கும் புள்ளியாகப் பனைமரம் இருப்பதையும் இக்கதைகள் உறுதிசெய்கின்றன.
தொகுப்பின் சிறப்பம்சங்கள்
- 120 பனைக் கதைகள் — நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் இருந்து
- இரண்டு தொகுதிகள் ஒரே முழுத் தொகுப்பாக
- 1500 பக்கங்கள் — சிறுகதை, பண்பாடு, சூழலியல், நாட்டுப்புற மரபு
- வட்டார வாழ்வியலை மண்ணின் மணத்தோடு முன்னிறுத்தும் தொகுப்பு
- முதல் பதிப்பு — அலர் வெளியீடு
நூல் விவரக் குறிப்புகள்
கேள்விகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பழம்படு பனை முழுத் தொகுப்பை இன்றே முன்பதிவு செய்யுங்கள்
தொகுதி 1 மற்றும் தொகுதி 2 இரண்டும் இணைந்த முழுமையான மக்கள் பதிப்பு பெருந்தொகுப்பு.
செப்டம்பர் 01 முதல் அக்டோபர் 15 வரை மட்டுமே · 2000 பிரதிகள் மட்டுமே